எஸ்.ஏ.ஸ்ரீதர் வெளியீடுகளின் முகப்புக்கள்


2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த ‘தமிழன் குரல்’ இதழ் என்னுடைய முதலாவது இதழாகும். தமிழக எழுத்தாளர், அமரர் வல்லிக்கண்ணன் அவர்களது வாழ்த்துச் செய்தியுடன் உற்சாகமாகத் தொடங்கினேன். எனது இதழ் வெளியீட்டை, அதன்பின்னர் சில காரணங்களால், பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘இலக்கியா’ என்ற பெயர் மாற்றத்துடன் அவ்விதழ் தொடர்ந்து 04 இதழ்கள் வரை வெளிவந்தது. வாழைச்சேனைப் பிரதேசத்து எழுத்துக்களை வெளியிட வேண்டும் என்கின்ற எனது அவாவில், 1 வீதமேனும் நிறைவேறியதாக எனக்குப் படவில்லை. ஏறத்தாழ 15க்கு மேற்பட்ட இளைய, மூத்த படைப்பாளிகள் இதில் எழுதினர்.

  பின்னர், பொருளாதாரப் பிரச்சினைகளினால் அவ்விதழை நிறுத்திவிட்டேன். பின்னர், 2005ஆம் ஆண்டு சுந்தரராமசாமியின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பினால், மீண்டும் ‘இலக்கியச் சிந்தனை’ என்கின்ற பெயரில் எனது இதழ் வெளியீடு மறுபடி ஆரம்பமானது, இம்முறை பல மூத்த எழுத்தாளர்களின் பாராட்டும் இவ்விதழுக்குக் கிடைத்தது. செங்கை ஆழியான், அந்தனி ஜீவா, எஸ்.எல்.எம்.ஹனீபா போன்றோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இறுதியாக ஏப்ரல் 2006இல் புதுமைப்பித்தனது நூற்றாண்டுச் சிறப்பு இதழோடு இலக்கியச் சிந்தனையும் நின்று கொண்டது, இப்போது மீண்டும் ‘இலக்கியச் சிந்தனை’யை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.

  முன்னர் வெளிவந்த எனது இதழ்களின் முகப்புக்களோடு, கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப் பேரவையினர் 2007இல் வெளியிட்ட ‘இளம்பரிதி’ மலரில் எனது வெளியீடுகள் சிலவற்றின் தலைப்புக்கள் இடம்பெற்றிருந்தன. அதனையும் இணைத்துள்ளேன்.

-    எஸ்.ஏ.ஸ்ரீதர்-











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்