சுவாமி விபுலானந்தர்
- பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் -
சுவாமி விபுலானந்தர் (1892-1947) இலங்கையில் பிறந்து பின் ஸ்ரீ ராமகிருஸ்ண மடத்தில் சேர்ந்து துறவு பூண்டிருந்தார். ஸ்ரீராமகிருஸ்ண விஜயத்தின் முதல் ஆசிரியராகப் பணியாற்றினார் (1921-1923).
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் சிலகாலம் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். நான் பல்கலைக்கழகத்தில் சேருமுன்பே விபுலானந்த சுவாமிகளிடம் என் தந்தையாருக்கும் (அ.மு.சரவணமுதலியார்) எனக்கும் நெருங்கிய பழக்கம் இருந்து வந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருக்கும்போதுதான் இசைக்கல்லூரியோடு பெரிதும் தொடர்பு கொண்டு பழந்தமிழருடைய யாழ் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார். என் கல்லூரித் தோழரும், நடமாடும் அகத்தியர் என்று சிறப்புப் பெற்றவருமாகிய அமரர்.க.வெள்ளைவாரணனார் இந்த ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தார்.
திருக்கொள்ளம்பூதூர் சென்று நீண்ட காலம் சுவாமிகள் தங்கியிருந்து ‘யாழ் நூல்’ என்ற பெயரில் தம் அரிய ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். அன்றைய நாள் தமிழ் அறிஞர்களுக்கு இல்லாத ஒரு பெருஞ்சிறப்பு சுவாமிகளிடம் இருந்தது. இயற்பியலில் பட்டம் பெற்ற அவர் ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் பெரும்புலமை படைத்தவராக இருந்தார். தமிழில் காணப்படும் சிறப்புக்களுக்கு ஆங்கிலம், வடமொழி என்பவனவற்றிலிருந்து அவர் சிறந்த ஒப்புமைப் பகுதிகளை எடுத்துக் கூடியவர்.
1939ஆம் ஆண்டில் செட்டிநாட்டிலுள்ள ஆவினிப்பட்டி என்ற ஊரில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடாகியிருந்தது. அக்கூட்டத்திற்கு சுவாமிகள் தலைமை தாங்கினார். நான் எடுத்துக் கொண்ட தலைப்பு, ‘கவிச்சக்கரவர்த்தி’ என்பதாகும். ஆங்கிலம், தமிழ் என்ற இரு மொழிகளிலும் வல்லுநராகிய மற்றொரு பேராசிரியரும் இதே தலைப்பைத் தந்திருந்தார்.
சுவாமிகள் என்னைச் சந்தித்து, “அந்தப் பேச்சாளர் கம்பனில் அதிக நாட்டம் கொண்டவர். நீங்களும் கம்பனையே பற்றிப் பேசினால் நன்றாக இராது. வேறொரு புலவரை எடுத்துக் கொண்டு பேசுங்கள்” என்று கூறினார்.
அதற்கு உடன்பட்ட நான் பாரதியைப் பற்றிப் பேசுவதாக ஒப்புக்கொண்டேன். அப்பொழுது இலக்கிய உலகில் பாரதி அதிகம் செல்வாக்கு பெற்றிராத காலம். முதலில் பேசிய அத்தமிழ்ப் புலவர் நல்ல தமிழறிவு, கம்பனில் பயிற்சி என்பவை நிரம்பப் பெற்றவராயினும் அவரிடம் ஒரு குறையிருந்தது. நேரங்கெட்ட நேரத்தில் குடித்துவிடுவார்.
அன்று கூட்டம் தொடங்குமுன் நிறைய மது அருந்திவிட்டார். மேடையில் வந்து நின்றவர் தனிப்பாடலிலுள்ள ‘ஆரார் தலைவணங்கார்?’ என்ற பாடலைப் பற்றிப் பேச முற்பட்டார்.
முடிதிருத்துபவரைக் கம்பன் புகழ்ந்து பாடியதாகத் தனிப்பாடல் திரட்டில் இப்பாடல் அமைந்துள்ளது. பதிப்பித்த புண்ணியவான் கொட்டை எழுத்தில் ‘கவிச்சக்கரவர்த்தி கம்பன் பாடியது’ என்ற தலைப்பையும் தந்துவிட்டார்.
பேசத் தொடங்கிய புலவர் இப்பாடலை விரிவாகப் பாடி அதற்கு விளக்கமும் கூறினார். எத்தகைய பெரியவரும் முடிதிருத்துபவரின் முன், தலை வணங்கியே தீரவேண்டும் என்ற கருத்துடைய அப்பாடலுக்கு நடிப்புத் திறமையுடன் விளக்கம் கூறிவிட்டு, “இப்படி ஒரு பாட்டைப் பாட யாரால் முடியும்? கவிச்சக்கரவர்த்தி கம்பனால் மட்டுமே முடியும்” என்று கூறி முடித்தார்.
தலைமை ஏற்றிருந்த சுவாமிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஆனால் ஒன்றும் கூறவில்லை. அவர் பேசி முடித்ததும் அக்கால மரபுப்படி அவர் பேச்சுக்கு முடிவுரை ஒன்றும் கூறாமல், என்னைப் பேசுமாறு சுவாமிகள் அழைத்தார்.
கூட்டம் தொடர்ந்தது. இரண்டாம் பேச்சாளனாகிய நான் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்ற பட்டத்திற்குப் பாரதி முழுத் தகுதி வாய்ந்தவர் என்பதை நிறுவும் வகையில் விரிவாகப் பேசினேன். ஒரு கவிச்சக்கரவர்த்தி என்பவர் பழைய சட்ட திட்டங்களைக் கட்டிக்கொண்டு வாழ வேண்டும் என்ற தேவையில்லை. சக்கரவர்த்தி ஆதலால் அவர் புதிய சட்டங்களை நிறுவலாம் என்ற அடிப்படையில் விவரித்து விட்டு பாரதி இதனை எவ்வாறு செய்தார் என்று கூறினேன்.
அதுவரை, உயிர்கள்தான் தலைவிகள், இறைவன் ஒருவனே தலைவன் என்றிருந்த பழைய மரபை உதறித் தள்ளிவிட்டு ‘கண்ணம்மா என் காதலி’, ‘கண்ணன் என் சேவகன்’ என்ற முறையில் பாரதி புதிய பாடல்களை அமைத்ததை எடுத்துக் கூறினேன்.
அன்றுவரை நிலவியிருந்த ஆண்டான் - அடிமைத்திறத்தை உதறிவிட்டு ‘விநாயகர் அறுபத்தாறு’ போன்ற பாடல்களைப் பாடியுள்ளார் பாரதி என்றும் கூறினேன்.
நான் பேசி முடித்ததும் விபுலானந்த சுவாமிகள், ஷெல்லி முதலிய மேனாட்டுக் கவிஞர்களுடன் பாரதியை ஒப்பிட்டு முடிவுரை கூறத்தொடங்கினார். ‘பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் பராசக்தி’ என்பது பாரதியின் வாக்கு. இதை எடுத்துக் காட்டிய சுவாமிகள், “இக்கருத்து புதுமையானது: இக்கருத்தைக் கவிஞர் எங்கிருந்து பெற்றார் தெரியுமா? அவர் போற்றிப் படித்த ஷெல்லியின் வானம்பாடி (ளமலடயசம) என்ற பாடலில் வரும் ஓரடியின் தமிழாக்கம் தான் இது” என்று கூறினார்.
பிறகு ‘டுமைந ய pழநவ hனைனநn in வாந டiபாவ ழக வாழரபாவஇ ளiபெiபெ hலஅளெ ரnடினைனநn வடைட வாந றழசடன ளை றசழரபா’ என்ற அடிகளை சுவாமிகள் எடுத்துக் காட்டினார்.
தமிழ்ப் புலவர்கள் பலரும் பாரதி என்ற பெயரையே அறியாத காலத்தில் அவ்வளவு ஆழமாகப் பாரதியைப் பயின்று ஒன்றேகால மணிநேரம் முடிவுரை என்ற பெயரில் சொற்பெருக்காற்றினார் என்றால், அது விபுலானந்த சுவாமிகள் ஒருவரால் மட்டுமே முடியும்.
விழா முடிந்து, தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு ஊர்க்கார நண்பரொருவர் சுவாமிகளிடம், “சுவாமிகளே, முதற்பேச்சுக்கு முடிவுரை சொல்லாமலே விட்டு விட்டீர்களே, ஏன்?” என்று கேட்டார். சுவாமிகளுடன் பத்துப்பேர் இருந்தனர்.
அந்த இலங்கைச் சிங்கம் எது பற்றியும் கவலைப்படாமல் “ஓ, யாம் துறவியாக இருந்ததால் அன்றோ, அந்தக் கயவனை நையப் புடைக்காமல் விட்டுவிட்டோம்” என்று கூறியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆதாரம்:
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய ‘நான் கண்ட பெரியவர்கள்’ என்ற நூல்.
நன்றி: ஸ்ரீராமகிருஸ்ண விஜயம், செப்டெம்பர் - 2001

கருத்துகள்
கருத்துரையிடுக