வாழைச்சேனைப் பிரதேசத்துப் படைப்பாளிகள்: 08

ஸ்ரீகந்தராஜா கிருஷாந்தி  (தாழையூர் கிருஷாந்தி)

கிழக்கிலங்கை மட்டக்களப்பு பேத்தாழைக் கிராமத்தில் ஸ்ரீகந்தராஜா – தனலெட்சுமி தம்பதிகளின் மகளாக 1992.08.13இல் பிறந்த ‘தாழையூர் கிருஷாந்தி’ தன் எழுத்தாளுமைகளால் பிரதேசத்தின் மண் மணம் கமழும் பல படைப்புக்களைத் தந்தவர். வசதியும் வாய்ப்புக்களுமே ஒருவரை சமூக அடையாளமாக்குகின்றன. ஏழ்மையில் வாழ்ந்தாலும் தன் படைப்பு அனுபவங்களால் மனதில் உறுதியுடன் எழுதிவரும் இவர் மட்-பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரக் கலைப்பிரிவில் கற்பவர். கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் எனும் மட்டங்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதம், நாடகம் எனும் துறைகளில் 2006 முதல் போட்டிகளில் பங்குகொண்டு பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றவர். இதுவரை பத்துச் சிறுகதைகளையும் பத்து கவிதைகளையும் எட்டுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களும் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரவையில் சிறுகிளை அருவியாக பரந்து செழிக்கும் என்று துணிந்து கூறலாம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்