திரு.எ.த.ஜெயரஞ்சித் அவர்களால் இயற்றிப் பாடப்பட்ட பாடல்கள் இரண்டு
உலக ஆசிரியர் தினப்பாடல்
கல்வியே சரணம் என்று பாடுவோம்
உன்னையே வாழ்வளிக்க கூடுவோம்
அன்று மாணவராக இன்று குருவாக
இந்தக் கல்விக் கூடம் அமர்ந்;தவரை வணங்குவோம்
ஓம், கல்வியே சரணம் என்று பாடுவோம்
உன்னையே வாழ்வளிக்க கூடுவோம்
சயனத்திலே கல்விக்கூடத்தைக் காணலாம்
சயனத்திலே, அந்தச் சயனத்திலே
கல்விச் சாலையைக் காணலாம்
அந்தச் சாலையிலே கல்விக்கோசம் கேட்கலாம்
மனச்சாட்சியே தேவன் அரசாட்சியே
ஒருபோதும் மறையாது எமதாட்சியே
(கல்வியே…)
பாலகரின் கல்வி தனக்குப் பலவழி
பாலகரின், அந்தப் பாலகரின் கல்வி தனக்குப் பலவழி
அந்தப் பதின்மூன்று படிகளிலே ஒருவழி
அந்த வழிகாணவே எமதருள் காணவே
முறையாக வரமருள்வோம் வாருங்களே
(கல்வியே..)
பொதிகைமலையில் எமது குருவும் தோன்றினார்
பொதிகை மலையில், அந்தப் பொதிகை மலையில்
எமது குருவும் தோன்றினார்
அவன் தொடக்கத்திலே இலக்கணத்தை அருளினார்
அந்த வழிகாணவே நாம் பலகாலமாய்
முறையாக விரதங்கள் மாறாமலே
(கல்வியே….)
பிரம்பெடுத்து கையை நீட்டிக் காட்டவே
பிரம்பெடுத்து, அந்தப் பிரம்பெடுத்து கையை நீட்டிக் காட்டவே
இந்த நண்பனையும் சோதரனாய்க் காட்டினீர்;
அந்தப் புகழ் காணவே நாங்கள் பலமாதமாய்
பலவாறு கோலத்தில் உருமாறியே
(கல்வியே…)
ஒளிச்சுடர் ஏந்திப் பாடும் கீதம்
பால்ச்சேனைக் கிராமத்தினைப் போற்றி வாழுவோம்
பண்புள்ள மனிதராக பணிந்து போற்றுவோம்
வாழும்வரை வாழ்வளித்து வணங்கி நிற்கிறோம்
வரமருள்வாய் வான் புகழும் வதன தெய்வமே!
வரமருள்வாய் வான் புகழும் வதன தெய்வமே!
பழகியநம் நெஞ்சங்கள் பிரிகின்ற நேரங்கள்
நெஞ்சத்தின் எண்ணத்தில் எண்ணற்ற பாரங்கள்
ஆறுமணி நேரம் வீட்டைவிட்டுப் பிரிந்தோம் - இங்கு
நண்பர்களின் கூட்டம் கைகொடுக்கச் சிரித்தோம்! -இங்கு
நண்பர்களின் கூட்டம் கைகொடுக்கச் சிரித்தோம்!
சிலநேரம் படிப்பு பலநேரம் துடிப்பு
கரும்பான நட்பு சிறுகுறும்பான காலம்
சுகங்காண வைத்து மனந்தாங்கும் பாரம் - அந்த
மனதாலே இங்கு மகிழ்வோமே நாமே! – அந்த
மனதாலே இங்கு மகிழ்வோமே நாமே!
என்றாவதொரு நாள் எமதுறவு வருமோ
இன்றாவதொரு நாள் இங்கேயே மகிழ்வோம்
நொந்தாவதேனும் தினந்;தோறும் கற்போம் - அதில்
எந்நாளும் நாமே மகிழ்வாக வாழ்வோம்!
எந்நாளும் நாமே மகிழ்வாக வாழ்வோம்!
பால்ச்சேனைக் கிராமத்தினைப் போற்றி வாழுவோம்
பண்புள்ள மனிதராக பணிந்து போற்றுவோம்
வாழும்வரை வாழ்வளித்து வணங்கி நிற்கிறோம்
வரமருள்வாய் வான் புகழும் வதன தெய்வமே!
வதன தெய்வமே! வதன தெய்வமே!
கருத்துகள்
கருத்துரையிடுக