கல்குடாத் தொகுதியில் முதலாவது சைவப்புலவர்கள்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் 1960 முதல் நடாத்தி வரும் ‘இளஞ்சைவப் புலவர்’, ‘சைவப்புலவர்’ தேர்வுகளில் இவ்வருடம் முதன்முறையாக கல்குடாத் தொகுதி வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பதினொருவர் சித்தியடைந்து பட்டம் பெற்றுள்ளனர். அதில் சைவப்புலவர் தேர்வில் இருவரும் இளஞ்சைவப் புலவர் தேர்வில் ஒன்பதுபேரும் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2011.11.13 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இத்தேர்வில் முப்பது பேர் சித்திபெற்றுள்ளனர். இவர்களுள் பதினொருவர் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்கள். சைவப்புலவர் பட்டம்பெற்ற எழுவருள் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் (2ஆம் வகுப்பு), செல்வி.நேமிநாதன் டிஹாசி (2ஆம் வகுப்பு) ஆகியோர் கல்குடாத் தொகுதியின் முதலாவது சைவப்புலவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இளஞ்சைவப்புலவர் தேர்வில் சித்திபெற்ற செல்வி.ஹரிஹரன் தர்மியா (2ஆம் வகுப்பு), செல்வி.மகேந்திரன் துஷ்யந்தினி (2ஆம் வகுப்பு), திரு. கனரெத்தினம் சிவதர்சன் (2ஆம் வகுப்பு), செல்வி.சுகுமார் சுவாணியா (2ஆம் வகுப்பு), செல்வி.யோகராஜா சுகிர்தா (2ஆம் வகுப்பு), திருமதி.சுஜேந்தினி உதயகுமார் (2ஆம் வகுப்பு), திரு.வைரமுத்து ஜெயந்தன் (2ஆம் வகுப்பு), செல்வி.தர்மராஜா சுதார்சினி (3ஆம் வகுப்பு), திரு.ஜீவகுமார் பால்ராஜ் (3ஆம் பிரிவு) ஆகியோருக்கும் பட்டமளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் 2004இல் நடைபெற்ற இளஞ்சைப்புலவர் தேர்வில் திரு.எதிர்மன்னசிங்கம் ஜெயரஞ்சித் (2ஆம் வகுப்பு) என்பவரும் 2010இல் நடைபெற்ற இளஞ்சைவப்புலவர் தேர்வில் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் (1ஆம் வகுப்பு), செல்வி.நேமிநாதன் டிஹாசி (2ஆம் வகுப்பு), செல்வி.யோகநாதன் யோகினி (2ஆம் வகுப்பு), செல்வி. இரத்தினசிங்கம் ஜீவகலா (2ஆம் வகுப்பு), செல்வி.அரசரெட்ணம் துஷாந்தினி (2ஆம் வகுப்பு), செல்வி.இராமச்சந்திரன் ரஜிப்பிரியா (2ஆம் வகுப்பு), திருமதி.தவலெட்சுமி யோகேந்திரன் (2ஆம் வகுப்பு), செல்வி.கேதாரம் விமலா (2ஆம் வகுப்பு) போன்றோரும் சித்திபெற்றுள்ளனர்.
வாழைச்சேனைப் பிரதேசத்து கலை, இலக்கிய, கல்வி, சமூக சாதனையாளர்களை கௌரவித்து ‘பாரதி விருது’ வழங்கி வருகின்ற ‘பாரதி கலை, இலக்கிய, சமூக மேம்பாட்டுக் கழக’த்தினர் இம்முறை நடத்தவிருக்கின்ற விழாவில் இதுவரை வாழைச்சேனைப் பிரதேசத்தில் ‘சைவப்புலவர்’, ‘இளஞ்சைவப் புலவர்’ தேர்வுகளில் சித்தியடைந்து பட்டம்பெற்றுள்ள பதினெண்மருக்கு ‘பாரதி விருது-2011’ வழங்கிக் கௌரவிக்கவுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக